கட்சி தொடங்கலாமா? அரசியலுக்கு தயாராகும் ரஜினிகாந்த்!!

Sugapriya Prakash| Last Modified திங்கள், 30 நவம்பர் 2020 (10:44 IST)
சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறார் ரஜினி. 
 
ரஜினிகாந்த் தனது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகத்தினர்களை சந்தித்து வரும் வேலையில் அவரது அரசியல் கட்சி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
மேலும், புதிய கட்சி உதயம், சட்டமன்ற தேர்தலில் தனது நிலைப்பாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்ட இது குறித்த தகவல் ஏதேனும் வெளிவரலாம் என ரசிகர்கள் காத்துகிடக்கின்றனர்.  அவர் கட்சி தொடங்கலாமா? என ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஏற்கனவே அரசியல் வருகை குறித்து தனது ரசிகர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பேன் என ரஜினிகாந்த் கூறிய நிலையில் இன்று அவர் ஆலோசனைக்குப் பின்னர் தனது தெளிவான முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :