இஷ்டத்துக்கு பேசும் நிர்வாகிகள்: முடிவு கட்டுவாரா ரஜினி??

Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 1 டிசம்பர் 2020 (12:30 IST)
சென்னை போயஸ் இல்லத்தில் மக்கள் மன்ற நிர்வாகி சுதாகருடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
நேற்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் 2 மணி நேரம் மேலாக ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், 
 
அரசியல் கட்சி குறித்து தனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெரிவிப்பதாகவும், நான் எந்த முடிவெடுத்தாலும் நாங்கள் உங்களுடன் இருப்போம் என நிர்வாகிகள் தெரிவித்தனர் எனவும் கூறியிருந்தார்.
 
இதனைத்தொடர்ந்து கட்சி தொடங்கி 10 முதல் 15 சதவீத வாக்குகளை வாங்கி தோல்வி அடைய விரும்பவில்லை எனவு உடல்நிலையும் அரசியலுக்கு ஏதுவாக இல்லை எனவும் ரஜினிகாந்த் நிர்வாகிகளிடம் கூறியதாக செய்திகள் பரவியது. ஆனால் இதனை ரஜினிகாந்த் மறுத்தார். 
 
இந்நிலையில் ரஜினி சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் மக்கள் மன்ற நிர்வாகி சுதாகருடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அநேகமாக மற்ற நிர்வாகிகள் வெளியிடு தகவல்களை கட்டுப்படுத்த இந்த ஆலோசனை இருக்க கூடும் என பேசிக்கொள்ளப்படுகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :