வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 27 டிசம்பர் 2020 (21:25 IST)

சிகிச்சை முடிந்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை வந்தடைந்தார்

சிகிச்சை முடிந்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை வந்தடைந்தார்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக கடந்த 25ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது 
 
தற்போது அவருக்கு ரத்த அழுத்த மாறுபாடு சீரடைந்து உள்ளதாகவும் அவர் நல்ல நிலையில் இருப்பதால் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாகவும் இன்று மதியம் அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது
 
அதன்படி இன்று மாலை ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனை அடுத்து அவர் ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திலிருந்து வந்து அங்கிருந்து காரில் அவர் போயஸ் தோட்டத்தில் உள்ள வீட்டிற்கு வந்தார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது 
 
ரஜினி வீட்டிற்கு வந்தவுடன் அவரை ஆரத்தி எடுத்து லதா ரஜினிகாந்த் அவர்கள் வரவேற்றுள்ளார் சென்னையில் அவர் ஒரு வாரம் யாரையும் சந்திக்க மாட்டார் என்றும் முழு ஓய்வு எடுப்பார் என்றும் அதன் பின்னரே தனது அரசியல் நிலை குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது