திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 15 ஜனவரி 2019 (11:28 IST)

ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து ...

சமீபத்தில் ரிலீசான ’பேட்டை’ படமும் அதற்கு முன்னர் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்’ 2.0’ படமும் ரஜினியின் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது.
இதனையடுத்து அவர் எப்போது அரசியலுக்கு வருவார் என்று அனைவரும் ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளனர்.
 
இந்நிலையில் இன்று பொங்கலை முன்னிட்டு அவர் வீட்டு முன் ரசிகர்கள் குவிந்தனர். ரசிகர்கள் அனைவருக்கும் ரஜினிகாந்த்  பொங்கல் வாழ்த்து கூறினார்.
 
மேலும் அவர் விடுத்துள்ள வாழ்த்தில் கூறியிருப்பதாவது:
 
’இந்த பொங்கல் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் மனநிம்மதியையும் அளிக்க இறைவனை பிராத்திக்கிறேன்’ இவ்வாறு கூறியிருக்கிறார்.