1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Updated : சனி, 15 அக்டோபர் 2016 (08:55 IST)

சிவகார்த்திகேயனுக்கு ரஜினிகாந்தின் அட்வைஸ்!

ரெமோ படத்தின் வெற்றி விழாவில், தன்னை சிலர் மிரட்டுவதாகக் கூறி நடிகர் சிவகார்த்திகேயன் மேடையில் அழுதார்.

 
 
இதை அடுத்து, கவலைப் படாதீங்க கடவுள் இருக்கிறார் என்று சிம்பு சிவகார்த்திகேயனுக்கு ஆறுதல் கூறினார். மேலும், சிவகார்த்திகேயன் விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று விஷால் தெரிவித்தார்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிவாவுக்கு போனில் கூறியதாக கூறப்படுவதாவது, “இது மாதிரி பிரச்சனைகளை எல்லாம் நினைத்து நினைத்து கவலைப்படாமல் மறந்துவிட வேண்டும். குடும்பத்துடன் ஒரு 10 நாட்களுக்கு வெளிநாட்டுக்கு சென்று வாருங்கள். எல்லாம் சரியாகிவிடும்.” என்றாராம்.
 
மேலும் பல பிரபலங்களும் சிவாவுக்கு போன் செய்து ஆறுதல் கூறியுள்ளார்கள்  என்று கூறப்படுகிறது.