திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 8 ஜனவரி 2019 (12:36 IST)

ரஜினியின் இரண்டாவது மகளின் இரண்டாவது ’திருமண அழைப்பிதழ்...’

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா ஆவார். இவர் சில வருடங்களுக்கு முன் சென்னையைச் சேர்ந்த  தொழிலதிபரை திருமணம் செய்தார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக  இருவரும் பிரிந்து விட்டனர். அதன்பின்னர்   நீதிமன்றம் மூலமாக விவாகரத்து பெற்றனர்.
இதனையடுத்து கோவையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகனை சவுந்தர்யா மறுமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகின்றன.
 
கடந்த மார்ச் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் அடுத்த மாதம் திருமணம் நடக்கவுள்ளதாக தெரிகிறது.
 
இதற்காக சவுந்தர்யா  அவரது தாய் லதா ரஜினிகாந்த்துடன் நேற்று முந்தினம் இரவு ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி  ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று கடவுளின் பாதத்தில்  அழைப்பிதழை வைத்து பூஜை செய்த,பிறகு பெற்றுக் கொண்டனர்.