1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 16 நவம்பர் 2018 (21:57 IST)

கமலுக்கு இருக்கும் அறிவு, தெளிவு ரஜினிக்கு இல்லை: ஈவிகேஎஸ் இளங்கோவன்

தமிழ் சினிமாவின் இரண்டு ஜாம்பாவன்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவருமே ஒரே நேரத்தில் தமிழக அரசியலில் குதிக்கின்றனர். இதுவரை திரையுலகில் நண்பர்களாக இருவரும் இருந்தாலும் இருவரும் கடுமையான தொழில் போட்டியாளர்கள். இந்த நிலையில் தற்போது அரசியல் போட்டியாளர்களாகவும் மாறியுள்ளனர்.

இந்த நிலையில் கமல் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியல் பயணத்தை தொடங்கிவிட்டார். ஆனால் ரஜினிகாந்த் இன்னும் கட்சி தொடங்கவில்லை. இருப்பினும் அவர் விரைவில் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அரசியல் கட்சி ஆரம்பித்த கமல்ஹாசனை விட கட்சி ஆரம்பிக்காத ரஜினி மீதே அதிக விமர்சனங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கமல், ரஜினி அரசியல் குறித்து முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியபோது, 'கமல் கட்சி தொடங்கி திறம்பட வழி நடத்தி செல்கிறார். தன் செயல்பாடுகளில் தெளிவாக இருக்கிறார். தொடர்ந்து மக்களை சந்தித்து கொண்டிருக்கிறார். ஆகவே கமலை ரஜினியுடன் ஒப்பிட வேண்டாம். அவருக்கு இருக்கும் திறமையும், அறிவும், சிந்தனையும் ரஜினிக்கு துளி அளவும் கிடையாது என்று கூறியுள்ளார்.