திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 16 நவம்பர் 2018 (16:42 IST)

2.0 படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு...

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், எமி ஜாக்‌ஷன், அக்‌ஷய்குமார் போன்றோர் நடிப்பில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள 2.0 படம் பிரமாண்ட முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இத்திரைப்படம் படம் வரும் 29 ஆம் தேதி வெளீயாகிறது. அறுநூறுகோடி ரூபாய்க்குமேல் மேல் இதன் தயாரிப்பு செலவு ஆனதாகவும், இந்தியாவில் இதுதான் மிக அதிக தயாரிப்புச்செலவுள்ள படம் எனவும் கூறப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் ஹிந்தி நடிகரும் 2.0 படத்தின் வில்லனுமான அக்‌ஷய்குமார் இப்படத்தில் தன் கதா பாத்திரத்துக்கான மேக்கிங் வீடியோவை தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 
மிக சவாலான இப்பாத்திரத்தில் அக்‌ஷய்குமார் தன் திறமையை நிரூபித்துள்ளார் என்றுதான் கூற வேண்டும். 2.0 வெளிவந்த பின் தான் படம் எப்படி என்பதை சொல்ல முடியும்.
 
அதுவரை பொறுத்திருப்போம். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படமும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது