1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 30 மே 2018 (12:03 IST)

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு 2 லட்சம் நிதியுதவி - ரஜினிகாந்த்

தூத்துக்குடிக்கு சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு 2 லட்சம் நிதியுதவி அளிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தனது அரசியல் வருகை குறித்த அறிவுப்பு பின்னர் முதன்முறையாக மக்கள் பிரச்சனைக்காக களமிறங்குகிறார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
 
இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தற்பொழுது நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார் ரஜினிகாந்த்.
 
ரஜினிகாந்த் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி அளிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
ரஜினிகாந்தின் வருகையையொட்டி தூத்துக்குடியில் போலீஸார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.