ஞாயிறு, 7 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 13 ஏப்ரல் 2025 (11:15 IST)

ஒரு திருடன் நல்லவனாக மாறிவிட்டால் மன்னிக்க மாட்டோமா.. பாஜக கூட்டணி குறித்து பொன்னையன்..!

Ponnaiyan
தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வரும் தேர்தலில் திமுக அணிக்கு சவாலாக அதிமுக பாஜக கூட்டணி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் ஏற்கனவே அதிமுகவின் பல தலைவர்கள் பாஜகவுடன் இனி கூட்டணி வைக்க மாட்டோம் என்று கூறி இருந்த நிலையில் தற்போது திடீரென கூட்டணி வைக்கப்பட்டது குறித்து அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் விளக்கம் அளித்துள்ளார்.
 
அரசியலில் இதெல்லாம் சகஜம், அதுவும் இந்திய அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம், பொறுத்திருந்து பாருங்கள். சூழல் மாறும் நிலைதான் அரசியல். கொள்கை மாறும்.
 
ஒரு திருடன் நல்லவனாக  ஒழுக்கமானவனாக மாறி அற்புதமான மனிதனாக மாறிவிட்டால் அவரை மன்னிக்க மாட்டோமா. அதனால நல்லவர்களாக மாறலாம். மும்மொழியை திணிக்காமல் இருக்கலாம். என்னென்னமோ நடக்கலாம். பொறுத்திருந்து பாருங்கள். 
 
 இவ்வாறு பொன்னையன் தெரிவித்தார்.

Edited by Siva