திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 14 டிசம்பர் 2018 (19:56 IST)

நீங்கள் சூழ்நிலைவாதியா? சுயநலவாதியா? சந்தர்ப்பவாதியா? ரசிகனின் குரல் ரஜினிக்கு கேட்குமா?

இரண்டு தினங்களுக்கு முன்னர் ரஜினியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் தற்போது நடித்து வரும் பேட்ட படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது. 
 
ரஜினியின் ரசிகர்கள் பலர் அவரது ரசிகர்களாக மட்டுமல்லாமல் பக்கதர்களாக உள்ளனர். அந்த வகையில் சினிமாவில் ரசிகர்களுக்கு எந்த குறையும் வைக்கதாக ரஜினி அரசியலில் பெரும் ஏமாற்றத்தை அளித்து வருகிறார். 
 
அவரது பிறந்தநாள் அன்று பல போஸ்டர்கள் ஒட்டப்பட்டது பேனர்கள் வைக்கப்பட்டது. ரஜினியின் தீவிர ரசிகர்கள் அவரின் பிறந்தநாளை தங்களது பிறந்தநாளை விட சிறப்பாக கொண்டாடி இருக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. 
 
இதற்கு மத்தியில் ரஜினி ரசிகனின் குரல் ஒன்று அவரது செவிகளுக்கு எட்டுமா என்பது சந்தேகமே. இருப்பினும் அவரது ஆதங்கம் பின்வருமாறு, 
 
வாழ்க ரஜினி, வளர்க அவரது புகழ்... 
தலைவா! நீங்கள் சரியான முடிவு எடுக்காததன் விளைவு... 
1996-ல் முதல்வர் பதவியை இழந்தீர்கள் 
1998-ல் அமைதியை இழந்தீர்கள் 
2004-ல் தன்னம்பிக்கையை இழந்தீர்கள் 
2006-ல் உங்களை வாழ வைத்த ரசிகர்களை இழக்க இருக்கிறீர்கள் 
தலைவா நீங்கள் சூழ்நிலைவாதியா? சுயநலவாதியா? சந்தர்ப்பவாதியா? 
இங்ஙனம்... உங்களை நம்பியிருந்த ரசிகர்களின் அவல குரல், சேலம்.
 
இதன் மூலம் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் எவ்வாறு எதிர்ப்பார்க்கிறார்கள் என்பது தெளிவாகிறது.