செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (15:45 IST)

அரசியலுக்கு வரமாட்டேன் என்று ரஜினி அறிவிக்கவில்லை - தமிழருவி மணியன்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்த நிலையில் தனது உடல்நலக் கோளாறு காரணமாக தனது அரசியல் முடிவை மாற்றிக் கொண்டார். இந்நிலையில் தமிழருவி மணியன் எப்போதும் அரசியலுக்கு வரமாட்டேன் என ரஜினி அறிவிக்கவில்லை என இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்,ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தோர் காந்திய மக்கள் இயக்கத்த்ல் பணியாற்ற விரும்பி என்னைத் தொடர்பு கொள்கின்றனர். அவர்களுக்கு ஒன்றைக்கூறுகிறேன்.

நீங்கள் அனைவரும் ரஜினி அரசியல் களத்தில் அடியெடுத்து வைப்பர் என்ற எதிர்ப்பார்ப்பிலும், அவர் முதல்வர் பதவியில் அமர்வார் என்ற கனவிலும் அவருடைய ரசிகர்களாக மாறவில்லை. அவரது அனைவரும் வியந்து பார்க்கும் ஆடம்பரமில்லாத பண்புநலன் ஒவ்வொருவரிடமும் பழகும் உயர்குணமாகியவற்றால் அவரது ரசிகர்களாக மாறினீர்கள். உங்கள் அற்பணிப்பைக் கண்டு நான் நெகிழ்ந்திருக்கிறேன்.

பாழ்பட்ட அரசியலைப் பழுதுபார்க்கவே ரஜினி அரசியல் உலகில் அடியெடுத்து வைக்க முயன்றார்.காலச்சூழல் அவருடைய கனவை நனவாக்க இடம் தராத நிலையில் இப்போது அவர் கட்சி தொடங்குவதைத் தவிர்த்துள்ளார். நான் எப்போதும் அரசியலில் அடியெடுத்து வைக்கப்போவதில்லை என்று அவர் அறிவிக்கவில்லை. ரஜினி மக்கள் மன்றத்தை அவர் கலைக்கவுமில்லை என்று தெரிவித்துள்ளார்.

தமிழருவி மணியனின் இந்த அறிக்கை, உடல் நிலை சரியானதும் ரஜினி எப்போதாவது கட்சி தொடங்குவது உறிதியென்ற நம்பிக்கையை ரஜினி ரசிகர்களிடையே விதைத்துள்ளது.

ஏற்கனவே நடிகை கஸ்தூரி ரஜினி குறித்து ஒரு கருத்துக் கூறியிருந்தார்.அதில், ரசிகர்களின் பல்லாண்டுக் கனவை ரஜினிகாந்த் புரிந்துகொள்ளவில்லை. நான் ஒரு ரஜினி ரசிகையாக அவரைப் புரிந்துகொள்ள முடிகிறது.ஆனால் ரசிகர்கள் ஆதங்கத்திலுள்ளனர். ரஜினி தனது அரசியல் வருகையை கூறாமல் இருந்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது..