1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 30 ஜனவரி 2021 (20:49 IST)

’’கதைத் திருட்டு’ வழக்கில் ’இயக்குநர் ஷங்கருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்

இயக்குநர் ஷங்கருக்கு எந்திரன் கதைத் திருட்டு தொடர்பான வழக்கில் எழுப்பூர் குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழ் சினிமாவை உலகளவில் உயர்த்திய பெருமை இயக்குநர் ஷங்கருக்கு உண்டு. அவரது ஜெண்டில்மேன் படம் தொடங்கி இருஆண்டுகளுக்கு முன் வெளியான எந்திரன் 2.0 படம் வரைஎல்லாமே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தது.

இந்நிலையில் எந்திரன் படக் கதை திருட்டு தொடர்பாக சென்னை எழும்பூர் நீதிமன்றம் ஷங்கருக்கு பிடிவாரண் பிறப்பித்துள்ளது.

கடந்த 1996 ஆம் ஆண்டு இனிய  உதயம் எனும் பத்திரிக்கையில் பிரபல எழுத்தாளர் தமிழ்நாடன் எழுதிய ஜுகிபா என்ற கதை வெளிவந்தது. இதே கதை பின்னர் திக் திக்தீபிகா என்ர நாவலாக 2007 ஆம் ஆண்டு வந்து வரவேற்பைப்  பெற்றது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் படத்திற்காக இக்கதை திருடப்பட்டதாக எழுத்தாளர் தமிழ்நாடான வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கு நீண்ட காலம் நடைபெற்று வந்த நிலையில், இதுவரை வழக்கில் ஆஜராகாமல் இருந்துவந்த இயக்குநர் ஷங்கருக்கு எந்திரன் கதைத் தொடர்பான வழக்கில் எழுப்பூர் குற்றவியல் நீதிமன்றம்ன் பிடிவாரண் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. இது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.