வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 29 ஜனவரி 2021 (10:27 IST)

கட்சி ஆரம்பிக்கும் லதா ரஜினிகாந்த்??

ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் மாதம் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்திருந்தார். ஆனால், அவருடைய உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என திட்டவட்டமாக கூறிவிட்டார். 
 
இதனிடையே, ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா தனது கணவருடன் காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு நடத்தினார். இந்த வழிபாடு தனது தாயார் லதா ரஜினிகாந்த் தொடங்கவிருக்கும் புதிய அரசியல் கட்சி வெற்றி அடைய வேண்டும் எனவும் ரஜினிகாந்த் பூரண நலம் பெற வேண்டும் என்பதற்காகவும் என கூறப்படுகிறது.