1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 18 ஜனவரி 2018 (15:53 IST)

திருட்டை தடுக்க பொதுமக்களுக்கு போலீசார் நோட்டீஸ் - வீடியோ

திருட்டை தடுக்க, கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் அனைவருக்கும் கரூர் எஸ்.பி ராஜசேகரன் தகவல் நோட்டீஸ் வழங்கினார்.

 
கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர் ராஜசேகரன், கரூர் நகர காவல்நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கரூர் மாவட்டத்தில் திருட்டை தடுக்க, பொதுமக்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் என்ன என்ன செய்ய வேண்டுமென்று காவல்துறையினர் தயாரித்த நோட்டீஸை கொடுத்தார். 
 
அதன் பின் அவர் பேசியதாவது:
 
இந்த நோட்டீஸ்களை அனைத்து வீடுகளுக்கும் காவல்துறை சார்பில் கொடுத்து வருகின்றோம், இதில் வீடுகளை பூட்டி செல்லும் குடியிருப்பு வாசிகள் செய்ய வேண்டியது மற்றும் அப்பார்ட்மெண்டில் சி.சி.டி.வி கேமிரா மூலம் குற்றத்தை தடுப்பது என்று அனைத்துவித விழிப்புணர்வுகளில் பொதுமக்களை ஈடுபடுத்தி வருகின்றோம்.
 
இதோபோல, கரூர், பசுபதிபாளையம், வெங்கமேடு, வாங்கல் உள்ளிட்ட பல பகுதிகளில் பூட்டிய பல்வேறு சம்பவங்களில் 23 வழக்குகளில் தேடப்பட்ட, திருப்பூர் மாவட்டம், வெள்ளகோயில் பகுதியை அடுத்த குறிஞ்சி பள்ளி பின்புறம், பரமசிவம் என்பவரது மகன் வேல்முருகன் மற்றும் கரூர் திருமாநிலையூர் அக்ரஹாரம் பகுதியை சார்ந்த பாலமூர்த்தி மகன் சஞ்சய் என்ற இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 11 திருட்டு வழக்குகளில் திருடு போன, 52 சவரன் தங்க நகைகள் மற்றும் 12 இரு சக்கர வாகனங்கள் என்று மொத்தம் ரூ 12 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன 
 
மேலும் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்ததோடு, திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பி வைத்ததாக கூறிய கரூர் எஸ்.பி. இந்த குற்றவாளிகளை கண்டுபிடித்த தனிப்படையினரை பாராட்டினார். 
 
பேட்டியின் போது, கரூர் டி.எஸ்.பி கும்மராஜா, கரூர் மாவட்ட காவல்துறை தனிப்பிரிவு ஆய்வாளர் அருள்மொழி அரசு ஆகியோர் உடனிருந்தனர். மேலும் இந்த குற்றவாளிகளோடு, தொடர்புடைய மற்ற குற்றவாளிகளையும் தேடுவதற்கு சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு  வருவதாகவும், கரூர் மாவட்ட காவல்துறையினர் ஆங்காங்கே இதற்காக சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் ராஜசேகரன் பெருமிதம் தெரிவித்தார். 
 
பேட்டி : முனைவர் தி.கி.இராஜசேகரன் – கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
 
சி.ஆனந்தகுமார் - செய்தியாளர்