வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 29 ஜூன் 2019 (12:06 IST)

மழைக்காலத்துக்கு முன் நீர்நிலைகளைத் தூர் வாரவேண்டும் – ரஜினிகாந்த் அறிவுரை !

மும்பையில் தர்பார் பட ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை வந்துள்ள ரஜினிகாந்த் நீர்நிலைகளை அரசு உடனடியாக தூர் வாரவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மும்பையில் ஷூட்டிங் முடித்துவிட்டு சென்னை வந்த நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ‘குடிநீர் பிரச்சனைகளுக்காக எனது ரசிகர்கள் இறங்கியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இதனைப் பல ஆண்டுகளாக நாங்கள் செய்து வருகிறோம். இப்போதுதான் அது வெளியில் தெரிகிறது. ஏரிகள், குளங்கள் எல்லாவற்றையும் உடனடியாக போர்க்கால அடிப்படையில் தூர்வாறவேண்டும். மழைநீரை போர்க்கால அடிப்படையில் சேமிக்க வேண்டும்.’ எனக் கூறியுள்ளார்.

மும்பையில் பலத்த மழைப் பெய்து வருவதால் தர்பார் படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் ரஜினிகாந்த் சென்னைக்கு வந்துள்ளார்.