திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (13:43 IST)

3 ஆண்டுகளுக்குப் பிறகு ஜீரோ எண்ணிக்கை… ராஜீவ் காந்தி மருத்துவமனை வெளியிட்ட சூப்பர் தகவல்!

கொரோனா பரவலுக்கு பிறகு முதல் முறையாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளே இல்லாத நிலை உருவாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையின் அதிகமாக பாதிக்கப்பட்டது தலைநகரான சென்னைதான். அப்போது சென்னையில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் நோயாளிகளால் நிரம்பி வழிந்தன.  முக்கியமாக தொடர்ந்து கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைதான்.

இந்நிலையில் இப்போது கொரோனா பரவல் வெகுவாகக் குறைந்துள்ள நிலையில் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனாவுக்காக சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை ஜீரோவாகியுள்ளது. இதை அந்த மருத்துவமனையின் டீன் தேரணி ராஜன் வெளியிட்டு ”இதை சாதிக்க உதவிய அனைவருக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார்.