வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 29 ஏப்ரல் 2024 (07:41 IST)

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு: ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..!

Rajesh Das
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கவும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கவும் ராஜேஷ் தாஸ் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.

தண்டனைக்கு எதிரான ராஜேஷ் தாஸ் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில் அவர் தற்போது உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்,

 கடந்த 2021 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சருக்கு பாதுகாப்பு அளிக்க சென்ற இடத்தில் பெண் எஸ்பிக்கு ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் மற்றும் முதன்மை அமர்வு ஆகியவை கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva