1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 22 ஏப்ரல் 2024 (17:17 IST)

6 பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. தலைமை ஆசிரியருக்கு 47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை..!

6 பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியருக்கு  போக்சோ வழக்கில்  2 ஆயுள், 47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
2014ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த முருகன் என்ற 54 வயது நபர் 6 பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் கொடுக்கப்பட்டது,
 
இந்த வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இன்று வெளியான தீர்ப்பில் முருகன் குற்றவாளி என மாவட்ட போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 
 
இந்த தீர்ப்பில் குற்றவாளி முருகனுக்கு 2 ஆயுள் தண்டனை, 47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.69,000 அபராதம் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு சிவகங்கை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran