இது என்னடா பித்தலாட்டம்..? ஈபிஎஸ்-க்கு ஓட்டு கேட்டும் ஜோ பைடன்!
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஜோ பைடன் அதிமுகவிற்கு வாக்கு சேகரிக்கிறார் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அரசியல் கட்சியினர் கூட்டணி பேச்சுவார்த்தையிலும் தேர்தல் பிரச்சாரத்திலும் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஜோ பைடன் அதிமுகவிற்கு வாக்கு சேகரிக்கிறார் என தெரிவித்துள்ளார். அதாவது, ஜோ பைடன் தனது 2 விரல்களை காட்டி அதிமுகவின் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்கிறாராம்.
அமெரிக்க அதிபராக, ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன், இன்று பதவியேற்க உள்ளார். இதனையடுத்து அந்நாட்டின் தலைநகர் வாஷிங்டனில் விழாக்கோலம் பூண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.