புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Updated : வியாழன், 28 பிப்ரவரி 2019 (11:08 IST)

மோடி கண்ணசைத்தால் ஒரு மணி நேரத்தில் பாகிஸ்தான் காலி... சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி !

மோடி கண்ணசைத்தால் ஒரு மணி நேரத்தில் பாகிஸ்தான் இருக்காது என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். 


 
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசுகையில், “அதிமுக அமைத்திருப்பது மங்களகரமான கூட்டணி. திமுக அமைத்திருப்பது மங்கிப் போன கூட்டணி. ஒவ்வாத கூட்டணி. அது ஒன்றுக்கும் ஆகாத கூட்டணி. தேசப்பற்றுள்ள மோடி நாட்டின் பிரதமராக வரவேண்டும்.
 
இந்திய இறையாண்மையை பாதுகாக்கின்ற பாஜக, அதிமுக, பாமக போன்ற மக்கள் நலக்கூட்டணியை ஆதரியுங்கள். இந்திய இறையாண்மைக்கு வேட்டு வைக்கின்ற கட்சிகளுக்கு நீங்கள் ஓட்டு போடாதீர்கள். 
 
மோடி கண்ணசைத்தால் ஒரு மணி நேரத்தில் பாகிஸ்தானே இருக்காது. இந்த விஷயத்தில் அதிமுக தொண்டர்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதி மக்களும் ஒவ்வொரு இளைஞனும் மோடியின் கரத்தை வலுப்படுத்த தயாராக இருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.