புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By VM
Last Updated : வியாழன், 28 பிப்ரவரி 2019 (10:55 IST)

ஜெனிவா ஒப்பந்தம் சொல்வதென்ன? அபிநந்தன் எப்படி நடத்தப்பட வேண்டும்?

காஷ்மீரில் நுழைந்த பாகிஸ்தான் விமானங்களை இந்திய போர் விமானங்கள் விரட்டியடித்தன அப்போது இந்திய போர் விமானம் ஒன்று பாகிஸ்தானுக்குள் விழுந்ததால் அதிலிருந்து சென்னையைச் சேர்ந்த விமானி அந்த நாட்டு இராணுவத்திடம் சிக்கி உள்ளார்.  



பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய இந்திய விமானி விங் கமாண்டர் அபிநந்தனை, பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் என இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.
 
போர் கைதிகளை எப்படி நடத்துவது என ஜெனிவா ஒப்பந்தம் வழிகாட்டுதல்களை வழங்குகிறது. இந்த ஒப்பந்தத்தில் இந்தியா பாகிஸ்தான் உள்பட 196 நாடுகளில் கையெழுத்திட்டுள்ளன.
 
அதன்படி கைது செய்யப்பட்ட அபிநந்தன் ஒரு போர் கைதி.  எனவே ஜெனிவா ஒப்பந்தத்தின் படி தான் அபிநந்தன் நடத்தப்பட வேண்டும். அவற்றை இப்போது பார்க்கலாம்.
 
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலக நாடுகளை உருவாக்கிய போர்க்கால விதிமுறைகள்தான் ஜெனிவா ஒப்பந்தம்.
 
சிறைபிடிக்கப்பட்ட ராணுவ வீரர்களை தாக்கவோ, சித்திரவதை செய்யவோக் கூடாது .  மனித நேயத்துடன் நடத்த வேண்டும்.
 
அவர்களை போரிலிருந்து தடுத்து வைப்பது மட்டுமே நோக்கமாக இருக்க வேண்டும்.போர் முடிந்த மறுகணமே அவர்களை விடுவிக்க வேண்டும்.
 
அவர்களின் உணவு, இருப்பிடம், உடை உறுதி செய்யப்பட வேண்டும்.
 
காயமடைந்த ராணுவ வீரர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.
 
ராணுவ வீரர்கள் தங்களது பெயர், பதவி, சேவை எண் ஆகிய  கேள்விகளுக்கு பதில் அளித்தால் போதும். மற்ற கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை. 
 
ராணுவ வீரர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்றால், அவர்களை அச்சுறுத்தவோ அல்லது மோசமாக நடத்தவோ கூடாது.
 
போர்க்குற்றம் நடந்திருக்கும் வாய்ப்பிருந்தால், அதற்காக ராணுவ வீரர்களை கைது செய்த நாடு விசாரணை நடத்தலாம். ஆனால், சர்வதேச மனிதாபிமான சட்டங்களின்படி, ஏற்கப்பட்ட வன் செயல்களுக்காக விசாரணை நடத்தக்கூடாது.