செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 26 நவம்பர் 2021 (07:54 IST)

சென்னையில் விடிய விடிய பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர்!

சென்னையில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
சென்னையில் இன்று முதல் வரும் சனிக்கிழமை வரை கனமழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் மற்றும் தமிழ்நாடு வெதர்மேன் ஆகியோர் எச்சரிக்கை விடுத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் நேற்று மாலை முதல் சென்னையில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் வரும் கனமழை காரணமாக பெரும்பாலான சென்னை சாலைகளில் தற்போது மழை நீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் வாகனத்தை ஓட்டி வருகின்றனர்
 
இன்று மிக கனமழை சென்னையில்  வாய்ப்பிருப்பதால் தேவை இருந்தால் மட்டும் வீட்டை விட்டு வெளியே வருமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது