திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 9 ஜூன் 2018 (11:55 IST)

கொடைக்கானலில் கனமழை: மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் பரபரப்பு

கடந்த சில வாரங்களாகவே தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் பருவ மழை தொடங்கிவிட்டதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டி வருகிறது. 
 
இந்த நிலையில் இன்று கொடைக்கானலில் காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இந்த கனமழையால் நகரின் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலின் மேல்மலை கிராமங்களிலும் கனமழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பயங்கர காற்றில் மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் இந்த மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.
 
மேலும் கொடைக்கானல் பகுதியில் உள்ள சில இடங்களில் மரங்களும் முறிந்து விழுந்துள்ளதால் சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.  எனவே கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ள சுற்றுலா பயணிகள் அங்கிருக்கும் நிலவரம் அறிந்து செல்லும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த கனமழையால் கொடைக்கானலில் இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என்பதில் மட்டும் அப்பகுதி மக்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி