திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 20 அக்டோபர் 2022 (18:16 IST)

சென்னையின் பல இடங்களில் பெய்து வரும் மழை: தீபாவளி வியாபாரிகள் கவலை!

Rain
சென்னையின் பல இடங்களில் தற்போது மழை பெய்து வருவதையடுத்து தீபாவளிக்கு அதிகமாக நடக்கும் என்று எதிர்பார்ப்பில் இருக்கும் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். 
 
வரும் 24-ஆம் தேதி தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகையை கொண்டாட இருக்கும் நிலையில் தீபாவளிக்கு புதுத் துணிகள் வாங்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது
 
குறிப்பாக சென்னை தி நகரில் உள்ள கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையின் முக்கிய பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதையடுத்து வியாபாரம் பாதிக்கப்படும் என்ற அச்சம் வியாபாரிகள் மத்தியில் உள்ளன
 
தற்போது சென்னையின் பட்டினப்பாக்கம், மந்தைவெளி, மெரினா கடற்கரை, அடையாறு, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
 

Edited by Siva