1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rain Predicted in Chennai and 29 Districts for Next 2 Hours

சென்னை உள்பட 30 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

மழை எச்சரிக்கை
தமிழகத்தில் சென்னை உட்பட 30 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
 
மழை பெய்யக்கூடிய மாவட்டங்கள்: ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல் ஆகிய  30 மாவட்டங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
மேலும், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வாக்கில், ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
இந்தா வந்துட்டாப்ல! வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி? - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!