Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழை: சென்னை வானிலை மையம்

Written By Siva
Updated: வெள்ளி, 7 ஜூலை 2023 (07:52 IST)
அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கேரளாவில் தற்போது தென்மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள சில பகுதிகளிலும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய பத்து மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்று அறிவித்துள்ளது. 
 
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் மாலை மற்றும் இரவு நேரத்தில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யலாம் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

எல்லாம் காட்டு

மேட்டூரில் மூதாட்டிக்கு விஜய் பரிசளித்த சன் கிளாஸ்!.. விலை என்ன தெரியுமா?..

நேபாள வெள்ளம்!.. ஒரே வீட்டில் 23 உடல்கள்.. 1000 பேர் பலி!..

தங்கம் வாங்க வேண்டாம்!. மோடி போட்ட வீடியோவால் பங்கு சந்தையில் வீழ்ச்சி!...

நேபாள பேரிடர் எதிரொலி!.. பனிப்பாறைகளில் சென்சார் வைக்கும் பணி தீவிரம்..

UGC NET மறுதேர்வு தேதியை அறிவித்த தேசிய தேர்வு முகமை.. 3 பாடங்களுக்கு எப்போது தேர்வு...

அடுத்த கட்டுரையில்
Show comments