வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 25 ஏப்ரல் 2024 (09:58 IST)

மக்களே உஷார்.! இன்றும் வெப்ப அலை வீசும்..! வானிலை மையம் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் இன்றும் வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
 
தமிழ்நாட்டில் கோடை தொடங்கியது முதல் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இடங்களில் வெயில் சதமடித்தது.  தகிக்கும் வெயிலால் ஏராளமானோர் தங்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்நிலையில் தமிழகத்தில் இன்றும் வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் வெயில் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

 
வட தமிழ்நாடு மற்றும் உள் மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது. இதனால், நண்பகல் 12 முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியே நடமாட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.