செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

rain
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
அசானி புயல் தாக்கம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள தேனி திண்டுக்கல் மதுரை விருதுநகர் நெல்லை தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
சென்னையை பொருத்தவரை இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது