திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 7 ஜூன் 2022 (07:41 IST)

அடுத்த 3 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் மழை: வானிலை அறிவிப்பு

Rain
தமிழகத்தில் உள்ள 30 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தமிழகத்தில் மழை பெய்யும் விவரங்கள் குறித்து அவ்வப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தமிழகத்தில் 30 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த 30 மாவட்டங்கள் பின்வருவன:
 
நெல்லை, கன்னியாகுமரி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 30 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது