திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 6 ஜூன் 2022 (22:19 IST)

சென்னை நிறுவனத்தில் பலகோடி முதலீடு செய்த தோனி!

dhoni
சென்னை தனது இரண்டாவது வீடு என்று கூறிய தல தோனி சென்னை நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
சென்னையைச் சேர்ந்த ட்ரோன் தயாரிப்பு நிறுவனமான கருடா ட்ரோன் தயாரிப்பு நிறுவனத்தில் பல கோடியை எம்எஸ் தோனி முதலீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது 
 
இதுகுறித்து கருடா நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் கூறியபோது தோனிஅர்ப்பணிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்பவர். எங்களது நிறுவனமும் சிறப்பாக உழைப்பதற்கு ஊக்குவிப்பார் 
 
நான் அவருடைய மிகப்பெரிய ரசிகர். அவரது பங்களிப்பு எங்கள் நிறுவனத்தின் கனவு நனவானது என்று கூறியுள்ளார் 
 
இந்த நிறுவனம் இந்தியாவின் 26 நகரங்களில் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது