காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்..!
இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதும் வடமேற்கு பருவமழை மீண்டும் தீவிரமாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் இன்று தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் அதாவது கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் பரவலாக சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு என்று ஏற்கனவே அறிவித்த நிலையில் இன்று ஐந்து மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று அறிவித்துள்ளதால் மேற்கண்ட ஐந்து மாவட்டத்தில் உள்ளவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Edited by Siva