1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 5 ஜனவரி 2024 (07:43 IST)

தமிழகத்தில் இன்றும் மழை பெய்யும்.. 21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

Rain
தமிழகத்தில் நேற்று சென்னை உள்பட பல பகுதிகளில் மிதமான மழை பெய்த நிலையில் இன்று 21 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றின் கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, தென்காசி, ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,.



அதேபோல் கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்தில் மேற்கண்ட 21 மாவட்டங்களில் மிதமான மழை முதல் லேசான மழை வரை பெய்யும் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்

Edited by Siva