வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 16 செப்டம்பர் 2018 (12:13 IST)

புழல் சிறை ரெய்டு எதிரொலி - சேலம், வேலூர், மதுரை சிறைகளில் போலீஸார் அதிரடி சோதனை

புழல் சிறையில் நடத்தப்பட்ட சோதனையில் ஆடம்பரப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதன் எதொரொலியாக சேலம், வேலூர், மதுரை சிறைகளில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் புழல் சிறையில் நடத்தப்பட்ட சோதனையில் கைதிகளுக்கு வெளியிலிருந்து கொண்டு வரப்பட்ட சாப்பாடு, சொகுசு அறை, செல்போன், கஞ்சா பொட்டலங்கள், டிவிக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பான புகைப்படம் வெளியானதால் சிறையில் சொகுசு வசதி செய்து கொடுத்திருப்பது அம்பலமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
இந்நிலையில் போலீஸார் இன்று சேலம், வேலூர், மதுரை மத்திய சிறைகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஆயிரக்கணக்கான போலீஸார் சோதனைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.