புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (07:45 IST)

ராகுல் பிரதமர் வேட்பாளர் இல்லை! திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த கம்யூனிஸ்ட்

தமிழகத்தில் காங்கிரஸ் இருக்கும் கூட்டணியிலும், கேரளாவில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்தும் அரசியல் செய்து இரட்டை வேடம் போடுவதாக கம்யூனிஸ்ட் கட்சி மீது ஏற்கனவே குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் தற்போது ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர் இல்லை என்று கூறி திமுகவுக்கு தர்மசங்கடத்தை கம்யூனிஸ்ட் ஏற்படுத்தியுள்ளது
 
திருப்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து பிரச்சாரம் செய்த அக்கட்சியின் தேசிய செயலாளர் சுதாகர் ரெட்டி, பிரச்சாரத்தின்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
தேர்தலுக்கு முன்பாக ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்பதை ஏற்று கொள்ள முடியாது. தேர்தல் முடிவுக்குப் பின்னர், கூட்டணி கட்சிகள் கூடி பிரதமரை தேர்வு செய்ய வேண்டும். மேலும் வயநாடு தொகுதியில் ராகுல் போட்டியிட்டிருக்க கூடாது. இதனால் காங்கிரஸ் கட்சி, பாஜகவுக்கு எதிரானதா? அல்லது இடதுசாரிகளுக்கு எதிரானவரானதா? என்ற குழப்பம் மக்களுக்கு ஏற்படும்' என்று கூறியுள்ளார்.
 
ஒரே கூட்டணியில் உள்ள கட்சிகள் ராகுல் பிரதமர் வேட்பாளர் என்றும், ராகுல் பிரதமர் வேட்பாளர் இல்லை என்றும் கூறியுள்ளதால் அக்கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.