மதுரை ஜில்லா கலகலக்க... நெல்லை சீமை அனல் பறக்க... கலக்கும் ராகுல்!!

Sugapriya Prakash| Last Modified சனி, 23 ஜனவரி 2021 (09:04 IST)
ராகுல்காந்தி தற்போது தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று தமிழகம் வர உள்ளார். 

 
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழக தலைவர்கள் மட்டுமல்லாது தேசிய தலைவர்களும் அவ்வபோது தமிழகத்திற்கு தேர்தல் காரணமாக வர தொடங்கியுள்ளனர். 
 
சமீபத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை காண மதுரை வந்த ராகுல்காந்தி தற்போது மீண்டும் பிரச்சாரத்திற்காக தமிழகம் வர உள்ளார். இந்நிலையில் தமிழகம் வரும் அவர் 25 ஆம் தேதி பல இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 
 
இதனிடையே ராகுலின் இந்த பயணத்துக்கு "ராகுலின் தமிழ் வணக்கம்" என பெயரிடப்பட்டுள்ளது. இதனை குறிப்பிடும் விதமாக, மதுரை ஜில்லா கலகலக்க... நெல்லை சீமை அனல் பறக்க... தமிழக வருகையையொட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழர்களின் தனித்துவமான கலாச்சாரத்தை மோடி அரசாங்கத்திடம் இருந்து ஒன்றிணைந்து பாதுகாப்போம் எனவும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :