செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 17 அக்டோபர் 2022 (12:34 IST)

முழு கொள்ளளவை நெருங்கிய வைகை அணை: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Vaigai
வைகை அணை தனது முழு கொள்ளளவை நிரம்பியுள்ள நிலையில் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் உள்ள பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால் வைகை அணைக்கு வரும் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது 
 
வைகை அணையின் மொத்த கொள்ளளவு 71 கன அடி என்ற நிலையில் தற்போது 69 கன அடி தண்ணீர் நிரம்பி விட்டது. இந்த நிலையில் அணைக்கு வினாடிக்கு சுமார் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதாகவும் அணையில் இருந்து வினாடிக்கு 700 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
வைகை அணை கிட்டத்தட்ட நிரம்பிவிட்டதை அடுத்து தேனி திண்டுக்கல் மதுரை சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை அபாயத்தை பொதுப்பணித்துறை சார்பில் விடுக்கப்பட்டுள்ளது
 
வைகை ஆற்றின் கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாறி கொள்ளும்படி பொதுப்பணித்துறை பொறியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .
 

Edited by Siva