வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புளோரிடா- நேரில் பார்வையிடும் அதிபர் பைடன்!
அமெரிக்க நாட்டில் உள்ள புளோரிடா மாகாணத்தில் தாக்கிய இயான் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்க்க அமெரிக்க அதிபர் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில், நேற்று முன் தினம் இயான் புயல் தாக்கியது. இதனால், பல நகரங்கள் வெள்ளத்தால் மூழ்கின.
உடனடியாக அங்கு சென்ற மீட்புப் படைகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இயான் புயலில் சிக்கி 50 க்கும் மேற்பட்டோர் உயிரியழ்ந்துள்ள நிலையில், இந்தப் புயல் புளோரிடாவுக்கு மட்டுமல்ல அமெரிகாவுக்கு ஏற்பட்ட நெருக்கடி என்று அமெரிக்க அதிபர் கூறினார்.
இந்த நிலையில், அதிபர் பைடன் , வரும் புதன் கிழமை புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் காணச் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
Edited by Sinoj