திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 26 ஆகஸ்ட் 2023 (14:14 IST)

சமூக வலைதள கணக்கில்ஆபாசமாக பதிவிடக்கூடாது: நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் உத்தரவு

vijay makkal iyakkam
விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் தரம் தாழ்ந்து ஆபாசமாக பதிவு செய்யக்கூடாது என புஸ்ஸி ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார் 
 
விஜய் மக்கள் இயக்கம் அடுத்து வேற ஒரு பரிமாணம் எடுக்க உள்ளது என்றும் தமிழ்நாடு அளவில் பலம் வாய்ந்த இயக்கமாக விஜய் மக்கள் இயக்கம் செயல் பட்டு வருகிறது என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார். 
 
விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் தங்கள் சமூக வலைதளங்களில் தரம் தாழ்ந்து ஆபாசமாக பதிவிட கூடாது என்றும் சமூக வலைதளத்தில் பதில் அளிக்கும் போது கருத்தியலாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 
 
விஜய் மக்கள் இயக்க தலைமை வெளியிடும் பதிவின் லைக் மற்றும் ஷேரின் எண்ணிக்கையை மில்லியனை தாண்ட வேண்டும் என்றும் அவர் விஜய் மக்கள் இயக்க தொழில்நுட்ப நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார்.
 
Edited by Mahendran