ஒரே நாளில் 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து ஆவின்நிறுவனம் சாதனை
தமிழகத்தில் முதன் முதலாக ஒரே நாளில் 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து ஆவின்நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து ஆவின் மேலாண்மை இயக்குநர் வள்ளலார் கூறியுள்ளதாவது : தமிழகத்தில் உள்ள 25 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவகுக்கு முன் நாளொன்றுக்கு 28,50000 லிட்டர் பால் கொள்முதல் செய்து வந்தோம். இந்நிலையில் தற்போது 34 லட்சம் லிட்டர் உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.