1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 9 ஆகஸ்ட் 2023 (20:01 IST)

காங்கிரஸின் கொத்தடிமை திமுகவே நிறுத்திக்கொள்: புரட்சி பாரதம் கட்சி எச்சரிக்கை..!

காங்கிரஸின் கொத்தடிமை திமுகவே நிறுத்திக்கொள்: புரட்சி பாரதம் கட்சி எச்சரிக்கை..!
காங்கிரஸ் கட்சியின் கொத்தடிமை திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும் என புரட்சி பாரதம் கட்சி எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: டெல்லி அதிகாரிகள் நியமன மசோதா குறித்து பேசும் முதலமைச்சரே, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. 
 
மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு கொத்தடிமையாக இருந்த நீங்கள் எடப்பாடி பழனிச்சாமியை கொத்தடிமை என எப்படி சொல்ல முடிகிறது. எமர்ஜென்சி காலத்தில் எந்த கட்சியால் அவதியற்றோமோ அந்த கட்சிக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் தானே திமுகவினர். 
 
இரவு பகல் பாரா உழைத்த தொண்டர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை தேர்தல் என்ற ஒரே காரணத்திற்காக மறந்து நேருவின் மகளை வருக நிலையான ஆட்சி தருக என கூறி காங்கிரசுக்கு கொத்தடிமையாக இருந்து விட்டு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva