வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 16 ஜனவரி 2022 (18:36 IST)

முதல்வரின் சகோதரர் சுயேட்சையாக போட்டி: பஞ்சாப் காங்கிரஸில் படு குழப்பம்!

பஞ்சாப் முதல்வரின் சகோதரருக்கு போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் அவர் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.யை 
 
உத்தரப்பிரதேசம் பஞ்சாப் கோவா உள்பட 5 மாநில தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலுக்கு காங்கிரஸ் பிஜேபி உள்பட அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
நேற்று பஞ்சாப் மாநில காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு வெளியான நிலையில் அந்த அறிவிப்பில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் அவர்களின் சகோதரர் போட்டியிடுவதற்கு வாய்ப்பு மறுக்கப் பட்டதாக தெரிகிறது
 
இதனை அடுத்து ஆத்திரமடைந்த அவர் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதனால் பஞ்சாப் மாநில காங்கிரசில் கடும் குழப்பம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் இருக்கும் காங்கிரசுக்கு மேலும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது