1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 14 மார்ச் 2019 (15:26 IST)

பெண்ணை வெட்டி வல்லுறவு செய்த கொடூரனுக்கு தூக்கு

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த எழில், கஸ்தூரி ஆகிய இருவரும் காதலர்கள். கடந்த 2011 ஆம் ஆண்டு சுருளி அருவி அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அந்தசமயம் கருநாக்கம் முத்தன் பட்டிய்இல் வசிக்கும் கட்ட வெள்ளையன் என்பவர் காதல் ஜோடியை மிரட்டி அவர்களிடம் இருந்த பணத்தை பறித்ததுடன் இருவரையும் ஆவேசமாக  அவ்விடத்திலேயே வெட்டியுள்ளான். இதில் எழில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
வெட்டுக் காயங்களுடன் கீழே சரிந்து விழுந்து கிடந்த கஸ்தூரியை இரக்கமே இல்லாமல் வெள்ளையன் கற்பழித்துள்ளான். 
 
காதல் ஜோடி மர்மமான முறையில் இறந்தது பற்றி போலீஸார் தீவிரமாக விசாரித்தனர். இவ்வழக்க்கு சிபிசிஐடி விசாரணைக்கு சென்றது. பின்னர் வெள்ளையன் குற்றவாளி என கண்டுபிடிக்கப்பட்டது. இதுசமபந்தமாக 8 வருடங்களாக நடந்த வழக்கில் குற்றவாளிக்கு 1 ஆயுள் தண்டனையுடம் 7 வருட கடுங்காவல் தண்டனை மற்றும் தூக்கு தண்டனை அளித்து தேனி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.