செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 14 செப்டம்பர் 2020 (13:21 IST)

மதிய உணவுக்கு பதிலாக பணம்; ஆனா உங்ககிட்ட தர மாட்டோம்! – புதுச்சேரி அரசு!

புதுச்சேரி அரசு பள்ளிகளில் மதிய உணவிற்கு பதிலாக நாளை முதல் பணம் வழங்க முடிவு செய்துள்ளது.

புதுச்சேரியில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களின் மதிய உணவுக்கு பதிலாக அவர்களுக்கு பணமாக அளிக்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.

புதுச்சேரி அரசு பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு செப்டம்பர் 18 வரை இந்த பணம் வழங்கப்படும் என்றும், மாணவர்களின் பெற்றோர்கள் உரிய ஆவணங்களோடு வந்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.