1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 14 செப்டம்பர் 2020 (12:51 IST)

உல்லாசத்திற்கு இடையூறு செய்த குழந்தை; அடித்து கொன்ற கள்ள காதலன்! – வேளாங்கண்ணியில் அதிர்ச்சி!

வேளாங்கண்ணியில் காதலியுடன் உல்லாசமாக இருக்க தடையாய் இருந்த குழந்தையை கள்ளக்காதலன் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் பரமக்குடி பகுதியை சேர்ந்தவர் எழிலரசி. இவரது கணவன் மகேந்திரன் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில் 5 வயது மகன் தீரன் மற்றும் 3 வயது மனுஸ்ரீ என்ற குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எழிலரசிக்கு திருவண்ணாமலையை சேர்ந்த ராமதாஸ் என்பவருடன் ஹலோ ஆப் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி செல்போனில் பேசி வந்த அவர்கள் தனிமையில் சந்திக்க முடிவெடுத்துள்ளனர்.

இதனால் மகன் தீரனை உறவினர் வீட்டில் விட்டுவிட்டு மகள் மனுஸ்ரீயை மட்டும் தூக்கி கொண்டு ராமதாஸை பார்க்க வேளாங்கண்ணி சென்றுள்ளார் எழிலரசி. ராமதாஸும், எழிலரசியும் அங்கு அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து உல்லாசமாக இருக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அதற்கு குழந்தை மனுஸ்ரீ இடையூறாக இருக்கவும் குழந்தையை ராமதாஸ் அடிக்க, குழந்தை மயங்கி விழுந்துள்ளது.

உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது குழந்தை வரும் வழியிலேயே இறந்துவிட்டது தெரிய வந்துள்ளது. உடனே இருவரும் குழந்தையை அங்கேயே போட்டுவிட்டு தப்பி விட்டார்கள். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீஸார் ராமதாஸ் மற்றும் எழிலரசியை தேடி பிடித்துள்ளனர். விசாரித்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவர அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.