1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 12 மே 2023 (10:25 IST)

ஆளுனர் மூலம் மாநில அரசுகளின் நிர்வாகம் முடக்கப்படுகிறது: முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு..!

narayanasamy
ஆளுநர்கள் மூலம் மாநில அரசு முடக்கப்படுவதாக புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். 
 
எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநர் மூலம் நிர்வாகத்தை பாஜக அரசு முடக்குகிறது என்றும் ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு வழங்கியுள்ளது என்றும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் அதிகாரம் நிலைநாட்டப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 
 
புதுச்சேரியில் நான் முதலமைச்சராக இருந்தபோது துணைநிலை ஆளுநர் மூலம் மோடி அமித்ஷா எனக்கு தொல்லை கொடுத்தனர் என்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் துணைநிலை ஆளுநரை தண்டிக்கப்பட்டால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
 
மேலும் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும் தொங்கு சட்டசபை அமைவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran