டிராக்டர் பேரணி நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை: புதுக்கோட்டை எஸ்பி எச்சரிக்கை

டிராக்டர் பேரணி நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை:
siva| Last Updated: திங்கள், 25 ஜனவரி 2021 (08:09 IST)
டிராக்டர் பேரணி நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை:
டெல்லியில் நாளை குடியரசு தின அணிவகுப்பு நடைபெற இருக்கும் நிலையில் டெல்லியில் போராட்டம் செய்து வரும் விவசாயிகள் பிரம்மாண்டமான டிராக்டர் பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளனர்
பல கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த டிராக்டர் பேரணி நடக்கும் என்றும் இதனால் நாட்டின் பல பகுதிகளிலிருந்து டிராக்டர்கள் டெல்லியை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

அது மட்டுமன்றி இந்தியாவின் பல பகுதிகளில் ஆங்காங்கே டிராக்டர் பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது வந்த தகவலின் படி புதுக்கோட்டையிலும் டிராக்டர் பேரணி நடத்த அம்மாவட்ட விவசாயிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது

இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள புதுக்கோட்டை எஸ்பி பாலாஜி சரவணன் அவர்கள், ‘தடையை மீறி டிராக்டர் பேரணி நடத்தினால் மோட்டார் வாகன சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். புதுக்கோட்டை எஸ்பி பாலாஜி சரவணன் அவர்களின் இந்த எச்சரிக்கையால் புதுக்கோட்டை விவசாயிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :