செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 8 ஜூலை 2024 (14:46 IST)

தமிழகத்தில் ரவுடிகள் ராஜ்ஜியம்..! கொலை நடக்காத நாளே இல்லை.! இபிஎஸ் காட்டம்..!!

edapadi
தி.மு.க., ஆட்சியில் காவல்துறை சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்றும் காவல் ஆணையரை மாற்றுவதால் எதுவும் மாறிவிடாது என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். 
 
சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளிடம் பேசிய அவர்,  அ.தி.மு.கவில் இருந்து ஓ.பி.எஸ்., நீக்கப்பட்டு விட்டதால் அவரை பற்றி பேச ஒன்றும் இல்லை என்றார். திமுக ஆட்சியில் காவல்துறை சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்றும் காவல் ஆணையர் மாற்றுவதால் எதுவும் மாறிவிடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை என குற்றம் சாட்டிய எடப்பாடி, பொது மக்கள், அரசியல் தலைவர்கள் என அனைவருக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது என்று அச்சம் தெரிவித்தார். 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என குடும்பத்தினர் கூறுகின்றனர் என்றும் அவர்களின் சந்தேகத்தை போக்க வேண்டியது அரசின் கடமை என்றும் அவர் குறிப்பிட்டார்.

 
முதல்வர் சிறப்பாக செல்பட்டு இருந்தால் சட்டம் ஒழுங்கு காக்கப்பட்டு இருக்கும் என்ற எடப்பாடி பழனிச்சாமி,  மாநிலத்தில் ரவுடிகளின் ராஜ்ஜியமாக உள்ளது என்று குற்றம் சாட்டினார்.
.