1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 10 மார்ச் 2024 (17:28 IST)

அடுத்த தேர்தலுக்குள் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்று தருவோம்: புதுவை பாஜக தலைவர்..!

அடுத்த தேர்தலுக்குள் புதுச்சேரி மாநில அந்தஸ்தை பெற்றுவிடும் என்றும் அதை நாங்கள் பெற்றுத் தருவோம் என்றும் புதுவை பாஜக தலைவர் செல்வகணபதி தெரிவித்துள்ளார் 
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு மத்திய பாஜக அரசு எந்தவிதமான அழுத்தமும் கொடுக்கவில்லை என்றும் முதலமைச்சர் ரங்கசாமியின் கருத்தை கேட்டு தான் மக்களவைத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளரை தேர்வு செய்தோம் என்றும் செல்வகணபதி தெரிவித்தார் 
 
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் வருங்காலத்தில் பிரதமர் மோடி புதுச்சேரிக்கு மாநில அரசு கொடுப்பார் என்றும் அடுத்த தேர்தலுக்குள் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைத்துவிடும் என்றும் அவர் கூறினார் 
 
காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி புதுவையில் செய்த சாதனைகள் காரணமாக மக்கள் நிச்சயம் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்றும் மக்களவை தேர்தலில் இரண்டரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்றும் செல்வகணபதி தெரிவித்தார்
 
Edited by Siva