போற இடமெல்லாம் கன்னிவெடி வச்சா எப்படி?!... புதுச்சேரியில் விஜய் ரோட் ஷோவுக்கு தடை!..
தவெக தலைவர் நடிகர் விஜய் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று அங்கு மக்களை சந்தித்து பேசி வந்தார். அதன் மூலம் தனது கட்சிக்கு ஆதரவு திரட்டி வந்தார்.அதோடு திமுகவையும் அவர் கடுமையாக விமர்சித்து வந்தார். அந்நிலையில்தான் அவர் கரூர் மாவட்டத்திற்கு சென்ற போது அவரை காண பலரும் கூடியதில் கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் மயக்கம் அடைந்தனர். அதில் 41 பேர் வரை உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தவெகவிற்கு கரும்புள்ளியாக மாறிவிட்டது. இதைத்தொடர்ந்து திமுக ஆதரவாளர்களும், மற்ற கட்சியினரும் விஜயையும் தவெக நிர்வாகிகளையும் கடுமையாக விமர்சனம் செய்தனர். எனவே விஜய் அதிலிருந்து மீளவே ஒரு மாத காலமானது. தற்போது தமிழக வெற்றிக் கழகம் இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறது. அதோடு சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
ஒருபக்கம் மீண்டும் சுற்றுப்பயணத்தை துவங்க திட்டமிட்டார் விஜய். சேலத்தில் டிசம்பர் 5ஆம் தேதி மக்களை விஜய் தரப்பில் அனுமதி கேட்ட போது போலீசார் மறுத்துவிட்டனர். தமிழகத்தில்தான் பிரச்சனை என புதுச்சேரியில் ரோட் ஷோ நடத்த திட்டமிட்டார் விஜய். இதற்காக தவெக சார்பில் புதுச்சேரி காவல்துறையிடம் அனுமதியும் கேட்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுத்திருக்கிறது. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் இருந்து விஜயை பார்க்க மக்கள் அதிக அளவில் திரண்டால் கரூரில் ஏற்பட்டது போலவே இங்கும் அசம்பாவிதம் ஏற்படும் என புதுச்சேரி காவல்துறை தரப்பு கருதுகிறதாம்.